திருவட்டாறு கோவில் சிலை, நகைகளை ஆய்வு செய்ய ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைப்பு
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவிலின் தங்க சிலைகள் மற்றும் ஆபரணங்களை ஆய்வு செய்ய, ஓய்வுப் பெற்ற நீதிபதியை விசாரணை ஆணையராக நியமித்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
கோவில் நகைகளை சரிபார்க்க தொடரப்பட்ட வழக்கில், 1988 இல் இருந்த கோவில் நகைகள் மற்றும் 1992 ஆம் ஆண்டு திருடு போன நகைகளின் பட்டியல் சமர்ப்பிக்கப்படாத நிலையில், கோவில் செயல் அலுவலர் நேரில் ஆஜராக உத்தரவிட்ட பின்னரே பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் சுட்டிக் காட்டினர்.
நகைகளை சரி பார்க்க கோவில் நிர்வாகம் குழு அமைத்திருப்பது விசாரணையை நீர்த்துப்போக செய்யும் வகையில் இருப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது
Comments