நீட் தேர்வில் ஜெயிக்கனுமில்ல.. மாணவர்களை அடித்த பயிற்சியாளர்..! மாணவி மீது செருப்பு வீச்சு கொடுமை

0 240

நெல்லையில் உள்ள ஜல் நீட் அகாடமியில் மாணவர்களை கம்பால் அடித்தும், மாணவி மீது செருப்பை தூக்கி வீசியும் பயிற்சியாளர் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகளுடன் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது

நீட் தேர்வுக்காண பயிற்சி மையத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் காட்சிகள் தான் இவை..!

டாக்டர் ஆக வேண்டுமென்றால் நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டும் அதுவும் அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்க வேண்டுமென்றால் 580 மதிப்பெண்களுக்குக்கு மேல் எடுக்க வேண்டும் என்பதால் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை நீட் பயிற்சி மையத்துக்கு அனுப்பி படிக்க வைத்து வருகின்றனர். அந்தவகையில் நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே கேளராவை சேர்ந்த ஜலாலுதீன் அகமத் என்பவர் நீட் பயிற்சிமையம் ஒன்றை நடத்தி வருகின்றார். ஒவ்வொரு மாணவரிடமும் சராசரியாக 60 ஆயிரம் ரூபாயில் இருந்து 80 ஆயிரம் ரூபாய் வரை இந்த பயிற்சி மையத்தில் கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது.

கடந்த வருடம் இந்த பயிற்சி மையத்தில் படித்து நீட்டில் தேர்ச்சி பெற்றவர்களில் 18 பேருக்கு அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தது. இதனை தொடர்ந்து கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், மதுரை, நாகர்கோவில், திருநெல்வேலி மற்றும் கேரள மாநில மாணவர்களும் இங்கு ஏராளமாக பயிற்சி பெற்று வருகின்றனர்.

தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை பயிற்சி வகுப்புகள் நடக்கின்ற நிலையில் பயிற்சியாளர் ஜலாலுதீன் அகமத், சில மாணவர்களை வரிசையாக நிற்க விட்டு பிரம்பு கம்பால் அடிப்பது போல சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சி ஒன்று வெளியானது

அதே போல பயிறசியாளர் ஜலாலுதீன் அகமத், செருப்புகளை தூக்கி வந்து , இது யாருடையது என்று கேட்டு, சம்பந்தப்பட்ட மாணவியின் மீது செருப்புகளை தூக்கி வீசிய காட்சியும் வெளியானது

இந்த வீடியோ காட்சிகள் மற்றும் காயம் அடைந்தவர்களின் புகைப்படத்தின் அடிப்படையில் நெல்லை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி, சம்பந்தப்பட்ட பயிற்சியாளர் மீது மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவம் குறித்து 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த சிசிடிவி காட்சி குறித்து பயிற்சிமையத்தில் விசாரித்த போது, சம்பவத்தன்று உணவு இடைவேளையின் போது சில மாணவர்கள் தூங்கியதாகவும், அதனை கண்டு ஆத்திரமடைந்த பயிற்சியாளர் கண்டித்ததாகவும் தெரிவித்தனர். மேலும் மையத்துக்கு வெளியே செருப்பை கழற்றி உரிய இடத்தில் வைக்காமல் , வாசலிலேயே விட்டு வந்ததால் , அந்த செருப்பை உரிய இடத்தில் வைக்க அறிவுறுத்தி தூக்கி வீசியதாகவும் விளக்கம அளித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments