சித்த மருத்துவர்கள் அலோபதி மருத்துவம் செய்ய தடை இல்லை - உயர்நீதிமன்றம்
தமிழகத்தில் சித்த மருத்துவர்கள் அலோபதி மருத்துவம் செய்ய தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2017ஆம் ஆண்டில் சிந்து என்ற சித்த மருத்துவரின் மருத்துவமனையில் ஆய்வு செய்த மருந்துக் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரி, அலோபதி மருந்துகள் வைத்திருந்ததாகக் கூறி வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, சித்த மருத்துவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி, உரிமம் இன்றி மருந்துகளை பதுக்கி வைத்திருந்ததாகவும், விற்பனை செய்ததாகவும் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்டார். மேலும், சித்த மருத்துவர்கள், அலோபதி மருத்துவம் செய்ய தடை இல்லை, எனினும் அலோபதி மருத்துகளை வைத்திருக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
Comments