கும்மிடிப்பூண்டி அருகே இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து

0 466

கும்மிடிப்பூண்டி அருகே 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் திருமணமாகி ஒரு மாதமே ஆன இளம்பெண் கணவன் கண்முன் உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் பாதிரிவேடைச் சேர்ந்த நாகார்ஜுனா என்பவர் தனது மனைவி விஸ்வ பிரியாவுடன் கவரப்பேட்டை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது கும்மிடிப்பூண்டி அருகே எதிர் திசையில் வேகமாக வந்த இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது மோதியதாக கூறப்படுகிறது.

இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட விஸ்வ பிரியாவை அழைத்துச் செல்ல 108 அவசர ஊர்தி காலதாமதமாக வந்தததாக சொல்லப்படுகிறது.

இதனை தொடர்ந்து கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments