வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக பிடிவாரண்ட்... சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு

0 788

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை கைது செய்ய அந்நாட்டின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கலவரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு தொடரப்பட்ட வழக்கில் வரும் நவம்பர் 18ஆம் தேதியன்று ஷேக் ஹசீனா உள்ளிட்ட 45 பேரை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் அந்நாட்டு போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஷேக் ஹசீனாவின் ஆட்சி காலத்தில், அரசு பணிகளில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட தனி இடஒதுக்கீட்டிற்கு எதிராக நடைபெற்ற தொடர் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறைகளில் சுமார் 1000 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

நிலைமை கையை மீறி சென்றதால் பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா கடந்த ஆகஸ்டில் இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments