அர்ஜெண்டினாவில் இங்கிலாந்தை சேர்ந்த பாடகர் லியாம் பெய்ன் விடுதி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு

0 809

அர்ஜெண்டினாவில் விடுமுறையை கழிக்கச் சென்ற இங்கிலாந்து பாடகர் லியாம் பெய்ன் விடுதி மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், இறப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் அவர் எடுத்த வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

ஒன் டைரக் ஷன் என்ற பாப் இசைக்குழுவின் மூலம்  பிரபலமான லியாம் பெய்ன், அர்ஜெண்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் தங்கும் விடுதியின் 3ஆவது மாடியில் இருந்து விழுந்து நேற்று உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்த நிலையில், இறப்பதற்கு முன் டைனிங் டேபிளில் அமர்ந்தபடி நண்பர்களுடன் பொழுதை கழிப்பது பற்றி லியாம் பெய்ன்மகிழ்ச்சியுடன் வீடியோ ஒன்றை  பதிவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments