அமெரிக்காவில் முன்கூட்டி தேர்தல் தொடக்கம்... 10க்கும் மேற்பட்ட மாகாணங்களில் இன்று வாக்குப்பதிவு
அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தற்போது ஜார்ஜியா, ஐயோவா, கான்சாஸ், ரோடு ஐலண்டு, டென்னிஸி, வடக்கு கரோலினா, லூசியானா, வாஷிங்டன், மசாசுசேட்ஸ், நேவாடா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாகாணங்களில் முன்கூட்டியே தொடங்கியுள்ளது.
அதிபர் தேர்தல் நவம்பர் 5 ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில் 45க்கும் மேற்பட்ட மாகாணங்களில் முன்கூட்டியே மக்கள் வாக்களிப்பர் எனக் கூறப்படுகிறது. முன்கூட்டி தேர்தலுக்கான கெடு தேர்தல் நாளுக்கு மூன்று வாரங்களுக்கு முன்பு என்பதால் அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 55 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர்.
Comments