கடல் சீற்றத்தால் தமிழ்நாடு, கேரளா, லட்சத்தீவுக்கு கள்ளக்கடல் எச்சரிக்கை
இந்தியப் பெருங்கடலில் கடல் சீற்றம் காரணமாக தமிழ்நாடு, கேரளா மற்றும் லட்சத்தீவில் 2 நாட்கள் கள்ளக்கடல் நிகழ்வு ஏற்படும் என்று தேசிய கடல் சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கக்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலில் அலைச் சுழற்சியினால் திடீரென கடல் அலைகள் பல அடி உயரத்துக்கு எழும் என்றும், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் தாழ்வான இடங்களில் கடல் நீர் உட்புகும் அபாயம் உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கரையோரப் பகுதிகளில் மீனவர்கள் சிறிய படகுகளை இயக்க வேண்டாம் என்றும், கரையோரத்தில் அலைகளால் இழுத்துச் செல்லப்படாத வகையில் படகுகளை கட்டி வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Comments