முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிக்கரணையில் ஏரியின் மதகு உடைத்து தண்ணீர் வெளியேற்றம்
சென்னை பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி நிரம்பியதால் தண்ணீரை விரைந்து வெளியேற்றுவதற்காக மதகு அருகே கரையை உடைத்து கால்வாயில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஏரி முழுமையாக நிரம்பினால் சுண்ணாம்பு கொளத்தூரில் பாதிப்பு ஏற்படும் என்பதால் முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், தண்ணீர் பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதிக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தண்ணீர் வெளியேற்றப்படும் பணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் பார்வையிட்டனர்.
Comments