நைஜீரியாவில் இரட்டைக் குழந்தைகள் ஒரே மாதிரியான ஆடை, அணிகலன்களுடன் கோலாகல திருவிழா

0 688

சர்வதேச அளவில் அதிக எண்ணிக்கையில் இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் நைஜீரியாவின் இக்போ ஓரா நகரில், இரட்டையர்கள் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இசை, நடனம், ஊர்வலம் என்று களைகட்டிய விழாவில், இரட்டையர்கள் ஒரே மாதிரியான ஆடை, அணிகலன்கள் அணிந்து உற்சாகமாகப் பங்கேற்றனர்.

இந்நகரில் வசிக்கும் யொருபா இன மக்களுக்கு ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தபட்சம் ஒரு இரட்டைக் குழந்தை பிறப்பது வழக்கம் என்றும், நைஜீரியாவின் ஓயோ மாநிலத்தில் ஒவ்வொரு 1,000 குழந்தைகளுக்கு 50 ஜோடி குழந்தைகள் இரட்டையர்களாகப் பிறக்கின்றனர் என்றும் பிரிட்டிஷ் மகப்பேறு மருத்துவர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments