2024-25ஆம் கல்வியாண்டுக்கான 10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

0 155

தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

கோயம்புத்தூரில் பேட்டியளித்த அவர், மார்ச் 28 முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வும், மார்ச் 5 முதல் 27ஆம் தேதி வரை 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வும் நடைபெறும் என்றார்.

மேலும், மே 9ஆம் தேதி +2 தேர்வு முடிவுகளும், மே 19ஆம் தேதியன்று 10 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கான முடிவுகளும் வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டார். மொத்தம் 25 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வுகளை எழுத உள்ளதாகவும் அன்பில் மகேஸ் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments