சென்னையில் நாளை முதல் படிப்படியாக மழை அதிகரிக்க வாய்ப்பு..!
நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
நாளை தெற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு - பாலச்சந்திரன்
5 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்
தஞ்சாவூர், திருவாரூர், மதுரை, தேனி, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தருமபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, நாமக்கல், அரியலூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
பெரம்பலூர், திருச்சி, கரூர், திருப்பூர், கோயம்புத்தூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
புதுக்கோட்டை, நாகை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
9 மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு
விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களிலும் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு
சென்னையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களிலும் நாளை கனமழைக்கு வாய்ப்பு
வரும் 15ஆம் தேதி சென்னையில் மிக கனமழைக்கு வாய்ப்பு
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் வரும் 15ஆம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு
திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களிலும் வரும் 15ஆம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு
சென்னையில் படிப்படியாக மழை அதிகரிக்கும்
சென்னையில் நாளை முதல் மழை படிப்படியாக அதிகரிக்க வாய்ப்பு - பாலச்சந்திரன்
சென்னையில் இன்று அவ்வப்போது மழை விட்டுவிட்டு பெய்ய வாய்ப்பு - பாலச்சந்திரன்
அக்.15ல் வடகிழக்கு பருவமழை தொடக்கம்
வரும் 15ஆம் தேதி வாக்கில் வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் துவங்கக்கூடும் - பாலச்சந்திரன்
இந்திய பகுதிகளிலிருந்து அடுத்த 4 நாட்களில் தென்மேற்கு பருவமழை விலகக்கூடும் - பாலச்சந்திரன்
''தமிழக அரசுடன் தொடர்பில் இருக்கிறோம்''
மழை வாய்ப்பு உள்ளிட்ட அனைத்து விவரங்களும் தமிழக அரசுக்கு வழங்கப்படுகிறது - பாலச்சந்திரன்
Comments