மாநகராட்சி அதிகாரிகள் எனக் கூறி பணம் கேட்டு மிரட்டல்.. மோசடி கும்பலில் NIA குற்றவாளி உள்பட 3 பேர் கைது

0 642

சென்னை சௌகார்பேட்டையில் மாநகராட்சி அதிகாரிகள் என கூறி நகைக்கடை பட்டறை உள்ளே நுழைந்து உரிமையாளரை பணம் கேட்டு மிரட்டியதாக மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடையின் மீது 7 லட்சம் ரூபாய் கடன் இருப்பதாகவும், அதனை செலுத்த வேண்டும் எனவும் கூறி 5 பேர் மிரட்டியதால் சந்தேகமடைந்த உரிமையாளர் யானைகவுனி போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

போலீசார் வருவதை அறிந்து 2 பேர் தப்பிடியோடிய நிலையில், பிடிபட்ட 3 பேரில் ஒருவர் 2021-ஆம் ஆண்டில் கொலை முயற்சி வழக்கில் என்ஐஏ - வால் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் அலி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments