மதுரையில் 3 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து பெய்த கனமழை - ரயில்வே தரைப்பாலத்தில் வெள்ளத்தில் சிக்கிய வாகனங்கள்

0 559

மதுரையில் பெய்த கனமழையால் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காரில் சிக்கியவர்களை காவல்துறையினர் மீட்டனர்.

மதுரை மாவட்டம் முழுவதிலும் 3 மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் கூடிய கனமழை தொடர்ச்சியாக பெய்தது.

ரயில்வே தரைப்பாலத்தில் 5 அடி அளவுக்கு மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியதால் பாலத்தை கடக்க முயன்ற காவல்துறை வாகனம் வெள்ளத்தில் சிக்கியது.

காவல்துறை வாகனத்தில் இருந்த போலீசார் நீரில் நீந்தி தப்பினர். தங்களுக்கு பின்னால் 3 பேருடன் வந்த மற்றொரு கார் மழை வெள்ளத்தில் சிக்கிய நிலையில், மூவரையும் போலீசார் பத்திரமாக மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments