ஈரான் நாட்டின் எண்ணெய் கிணறுகளை தாக்க இஸ்ரேல் திட்டம் ?

0 1562

இஸ்ரேலுக்கு உதவினால் கடும் எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும் என வளைகுடா நாடுகளை ஈரான் எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் நாட்டின் எண்ணெய் கிணறுகளை இஸ்ரேல் தாக்கினால், கச்சா எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு, உலகளவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சவுதி அரேபியா, அரபு அமீரகம், கத்தார் போன்ற அமெரிக்காவின் நட்பு நாடுகள், ஈரானை இஸ்ரேல் தாக்குவதற்கு, தங்கள் வான் பரப்பை பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என அந்நாடுகளிடம் ஈரான் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இஸ்ரேலுக்கு உதவினால், தங்கள் நாட்டிலுள்ள எண்ணெய் கிணறுகளை ஈரான் தாக்கக்கூடும் என்பதால் இந்த சண்டையில் தங்களை இழுக்க வேண்டாம் என அமெரிக்காவுக்கு வளைகுடா நாடுகள் தெரிவித்துள்ளதக தகவல்கள் வெளியாகி உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments