நிதிப் பிரச்னையால் போயிங் நிறுவனத்தில் 17,000 பணியாளர்களைக் குறைக்க நிறுவனம் முடிவு
அமெரிக்காவின் போயிங் விமான தயாரிப்புத் தொழிற்சாலையில், ஒரு மாதத்திற்கும் மேலாக ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், போயிங் நிறுவனத்தில் 17 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நிதி நிலைமை மோசமாக உள்ளதால் மேலாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் எக்ஸ்கியூட்டிவ் உள்ளிட்ட அனைத்து பதவிகளிலும் ஆட் குறைப்பு மேற்கொள்ளப்படும் என்று, போயிங் தலைமை செயல் அதிகாரி கெல்லி ஆர்ட்பெர்க் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து சர்வதேச அளவில் போயிங் நிறுவனத்தின் பங்குகள், 1.7 சதவீதம் சரிவை சந்தித்தன.
Comments