ஸ்டீயரிங், பிரேக், ஆக்சிலரேட்டர் இல்லாத டெஸ்லா தானியங்கி டாக்சியை அறிமுகப்படுத்தினார் எலான் மஸ்க்
ஸ்டீயரிங், பிரேக், accelerator இல்லாத தானியங்கி மின்சார டாக்சியை எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் வடிவமைத்துள்ளது. நாலாபுறமும் கேமராகள் பொருத்தப்பட்டு, செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கக்கூடிய இந்த தானியங்கி டாக்சிகளின் விலை 25 லட்ச ரூபாய்க்கும் குறைவாக இருக்கும் என மஸ்க் தெரிவித்துள்ளார்.
தானியங்கி டாக்சிகளின் உரிமையாளர்கள், அவற்றை வாடகை டாக்சி ஆப்-களுடன் இணைத்து வருவாய் ஈட்டலாம் எனவும், வாடிக்கையாளர்கள் அவற்றை ஆப் மூலம் புக் செய்து பயணிக்கலாம் எனவும் மஸ்க் கூறியுள்ளார்.
20 பேர் பயணிக்கக்கூடிய ரோபோ வேனையும், பல்வேறு வீட்டு வேலைகளை செய்யக்கூடிய ரோபோவையும் அறிமுகப்படுத்திய எலான் மஸ்க் 2 ஆண்டுகளில் உற்பத்தியை தொடங்கப்போவதாகத் தெரிவித்துள்ளார்.
Comments