தென்கொரியாவைச் சேர்ந்த 53 வயது பெண் எழுத்தாளருக்கு நோபல் பரிசு
தென்கொரியாவைச் சேர்ந்த 53 வயது பெண் எழுத்தாளர் ஹான் காங்கிற்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. கவித்துவமான உரைநடை மூலமாக வரலாற்று அதிர்வுகளையும் மனித வாழ்வின் இழப்புகளையும் தமது படைப்பில் எழுதியதால் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் கமிட்டி அறிவித்துள்ளது.
ஆணாதிக்கம், வன்முறை, வரலாற்று தவறுகள் மற்றும் அநீதிகள் ஆகியவற்றுக்கு எதிராகப் போராடும் பெண்களைப் பற்றியே ஹான் காங் தொடர்ந்து எழுதி வருகிறார்.
Comments