பருத்தி வீரன் பாணியில் விபரீத சம்பவம் செய்த வில்லங்க மாப்பிள்ளை..! 2k கிட்ஸ் எல்லாத்திலும் அவசரமா ?

0 1793

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே முறைப்பையனை காதலித்து வந்த கல்லூரி மாணவி ஒருவர், பெற்றோர் எதிர்ப்பால் காதலை கைவிட்ட நிலையில் வீட்டிற்கு பெண் கேட்பது போல சென்ற இளைஞர், மாணவியை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தானும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது 

சிவகங்கை அருகே மதகுபட்டி மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் மோனிஷா இவர் சிவகங்கையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் படித்து வந்தார், இவரை சிங்கம்புணரி அருகே பிரான்மலையைச் சேர்ந்த மாமன் மகன் ஆகாஷ் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்க்கிடையே ஆகாஷ் வேறு சில பெண்களுடன் சுற்றுவதாக தகவல் தெரியவந்ததால் மோனிஷாவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து மோனிஷா , ஆகாஷுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டதாக கூறப்படுகின்றது.

காதலை பிரேக் அப் செய்த தனது முறைப்பெண்ணின் வீடுத்தேடிச்சென்ற ஆகாஷ் , அங்கிருந்த மோனிஷாவின் பெற்றோரிடம் மோனிஷாவை திருமணம் செய்து தரும்படி பெண் கேட்டுள்ளார்.

இதற்கு மோனிஷாவின் பெற்றோர்கள் மறுத்ததால் அங்கிருந்து சென்றுவிட்டதாக கூறப்படுகின்றது. பின்னர் சிறிது நேரம் கழித்து காதலியின் வீட்டுக்கு சென்ற ஆகாஷ், மோனிஷாவை நேரில் சந்தித்து தனது காதலை ஏற்றுக்கொள்ளுமாறு மீண்டும் வற்புறுத்தியதாக கூறப்படுகின்றது.

வீட்டில் யாரும் இல்லாத நிலையில் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது “எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்க கூடாது” என்று ஆத்திரப்பட்ட ஆகாஷ், அங்கு கிடந்த அரிவாள்மனையால் மோனிஷாவின் கழுத்தை அறுத்ததாகவும், அருகில் கிடந்த பீர் பாட்டிலை உடைத்து தனது கழுத்தில் குத்தி தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகின்றது.

உடனடியாக இருவரையும் மீட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்ல அருகில் எவரும் இல்லாததால் கழுத்தில் இருந்து அதிக அளவி ரத்தம் வெளியேறியதால் அடுத்த சில நிமிடங்களில் ஒருவர் பின் ஒருவராக இருவருமே பரிதாபமாக பலியானதாக போலீசார் தெரிவித்தனர்.

மதகுபட்டி போலீஸார் இருவரது சடலங்களையும் கைப்பற்றி சிவகங்கை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். நினைத்த காதல் கைகூடாத ஆத்திரத்தில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு இரு உயிர்களை காவு வாங்கி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments