தூய்மை நகரங்களின் பட்டியலில் சென்னை பின்னுக்கு தள்ளப்பட்டதாக இ.பி.எஸ். கண்டனம்,

0 554


இந்தியாவில் உள்ள நகரங்களின் தூய்மைப் பட்டியலில், அதிமுக ஆட்சியின்போது 2020இல் 45-ஆவது இடத்திலும், 2021இல் 43-ஆவது இடத்திலும் இருந்த சென்னை மாநகராட்சி திமுக ஆட்சியில் தற்போது 199வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இனியாவது, தூய்மைப் பணிகள், சாலைப் பராமரிப்பு, தினசரி குடிநீர் வழங்குதல், கழிவு நீர் அகற்றுதல் போன்ற பணிகளை முறையாக மேற்கொண்டு தூய்மை நகரங்களின் பட்டியலில் சென்னையை முன்னிலைக்கு கொண்டுவர வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments