அதிமுகவை காட்டி பணம் வாங்கிய திருமா... திமுகவிடம் வசூலா? கொளுத்திப்போட்ட சீனிவாசன்.. அபாண்டமான அவதூறு என மறுக்கும் திருமா!

0 1158

மதுஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவுக்கு அழைப்பு எனக்கூறி, திமுக அமைச்சர்களிடம் கோடிக்கணக்கில் திருமாவளவன் பணம் பெற்றதாக அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால், இது அபாண்டமான அவதூறு என திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். 

திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வழங்கவில்லை எனக்கூறி, மதுரையில் அம்மா பேரவை சார்பில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்றார்.

போராட்டத்தில் பேசிய அவர், அதிமுகவில் இருக்கும் அணிகள் சும்மா லெட்டர் பேடில் பெயரை போட்டுகொண்டு மப்பில் இருக்கக் கூடாது. அப்படிப்பட்ட ஆட்கள் நமக்குத் தேவையில்லை என்றார்.

தொண்டர்கள் சாரையாக வருவதைப் பார்த்த திண்டுக்கல் சீனிவாசன் போலீசாரை பார்த்து இந்த ரோட்டை பேரிக்கார்டர் போட்டு போக்குவரத்தை மாற்றி விடுங்க. இல்லை என்றால் நீங்க ரிசர்வ் வண்டி பட்டாலியனை கூப்பிட வேண்டியது இருக்கும் என்றார்.

சீனிவாசன் பேசிக்கொண்டு இருக்கும் போதே, திடீரென மேடை ஏறிய சில நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் உதயகுமாருக்கு பொன்னாடை போர்த்த ஆரம்பித்தனர். இதனால், வெறுப்பான அவர் சீறினார்.

இரட்டை இலையை எதிர்த்து போட்டியிட்ட ஒ.பன்னீர்செல்வம் இரட்டை இலையை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரு சூழ்நிலையை உருவாக்கி கேவலப்படுத்திவிட்டு எந்த முகத்தை வைத்துக்கொண்டு மீண்டும் அதிமுகவில் தன்னை சேர்த்துக் கொள்ளுங்கள் என கேட்கிறார் என ஒ.பி.எஸை அட்டாக் செய்தார் சீனிவாசன்..

அடுத்தாக, அதிமுகவுக்கு அழைப்பு என்ற ஒன்றைச் சொல்லி திமுக அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு ஆகியோரிடம் திருமா கோடிக்கணக்கில் பணம் பெற்றதாக திருமாவின் மதுஒழிப்பு மாநாடு குறித்து அதிரடி குற்றச்சாட்டை சீனிவாசன் முன்வைத்தார்...

அடுத்தது கம்யூனிஸ்ட் கட்சிகளை கடுமையாக சீனிவாசன் சாடினார்.

சீனிவாசனின் குற்றச்சாட்டை மறுத்துள்ள திருமாவளவன், இது அபாண்டமான அவதூறு என்றும், நகைப்புக்குறியது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments