குடிகார நண்பரிடம் பைக்கை கொடுத்த பாவத்துக்கு பழுத்தது 24 ஆயிரம் ரூபாய் தண்டம் ..! தவிப்புக்கு ஸ்ரிக்ட் போலீசும் காரணம்

0 1238

கோவையில், நண்பரின் பைக்கை இரவல் வாங்கிச்சென்ற குடிகார ஆசாமி போலீசில் சிக்கியதால் 10 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது.

ஒரு வருடமாக பணம் சேர்த்து பைக்கை மீட்கச்சென்ற பைக் உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு

குடிகார கூட்டாளியை நம்பி பைக்க கொடுத்த பாவத்துக்கு, 10 ஆயிரம் அபராத்துடன், பைக்கை பறிகொடுத்துவிட்டு தவித்து நிற்கும் மாணிக்கம் இவர் தான்..!

கோவை சாய்பாபா காலணியை சேர்ந்தவர் மாணிக்கம், இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு தனது பைக்கை நாண்பர் அப்துல் ரகுமானுக்கு இரவல் கொடுத்துள்ளார். மாணிக்கத்தின் பைக்கை வாங்கிச்சென்ற அப்துல்ரஹ்மான், மது அருந்தி விட்டு வாகன ஓட்டியதாக மேட்டுப்பாளையம் போலீசாரிடம் சிக்கி உள்ளார். 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த போலீசார், பைக்கை பறிமுதல் செய்தனர். அபராதத்தை கட்டிவிட்டு பைக்கை எடுத்துச்செல்ல அறிவுறுத்தினர்.

அப்துல் ரஹ்மான் பைக்கை எடுக்க எந்த முயற்சியு ம் மேற்கொள்ளாத நிலையில் , மாணிக்கம், பணம் சேர்த்து, தனது வண்டியை மீட்க காவல் நிலையம் சென்றார். போலீசாரிடம் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தினார். பைக் அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான கட்டண பார்க்கிங் பகுதியில் நிற்பதாக போலீசார் தெரிவித்தனர். அங்கு சென்று போலீசாரிடம் அபராதம் கட்டியாச்சி பைக்க தாருங்கள் என்று உரிமையோடு கேட்டுள்ளார் மாணிக்கம்.

அடுத்து அவர்கள் கூறியதுதான் மாணிக்கத்தை மலைக்க வைத்துள்ளது. உங்க வண்டி 351 நாட்கள் நம்ம பார்க்கிங்ல நிறுத்தப்பட்டிருக்கு, போலீஸ் வந்து நிறுத்தும் வண்டிக்கு நாள் ஒன்றுக்கு 40 ரூபாய் கட்டணம் அப்படி பார்த்தா, நீங்க 14 ஆயிரத்து 40 ரூபாய் தரணும் உங்களுக்காக 40 ரூபாய் டிஸ்கவுண்ட் என்று கூறி 14 ஆயிரம் ரூபாயை தந்து விட்டு வண்டியை எடுத்துச்செல்ல அறிவுறுத்தியதால் தவித்து போனதாக சொல்கிறார் மாணிக்கம்

அந்த பார்க்கிங்கில் இரு சக்கர வாகனம் நிறுத்த நாள் ஒன்றுக்கு 5 ரூபாய் மட்டுமே கட்டணமாக மாநகராட்சி நிர்ணயித்துள்ள நிலையில், 35 ரூபாய் அதிகமாக கேட்பதாக வேதனை தெரிவித்த மாணிக்கம், கட்டணத்தை குறைச்சி போடுங்க அண்ணான்னு காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments