மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் 100 அடி நீளம் வரை உடைந்து விழுந்த நடைமேடை
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டர் வசதியுடன் நடைமேம்பாலம் அமைப்பதற்காக அஸ்திவாரம் போட தோண்டப்பட்ட பள்ளத்தின் அருகே இருந்த முதலாவது நடைமேடை சுமார் 100 அடி நீளம் வரை உடைந்து விழுந்தது.
பயணிகள் அமரும் மூன்று இருக்கைகள் மற்றும் ஒரு மின்கம்பமும் சரிந்து விழுந்தன. நடைமேடையில் காத்திருந்த பயணிகள், விபத்து ஏற்படும் சில நிமிடங்களுக்கு முன்பு வந்த ரயிலில் ஏறியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Comments