கோயம்புத்தூர் சூலூர் அருகே பி.ஏ.பி வாய்க்காலில் டிராக்டர் கவிழ்ந்து விபத்தில் இருவர் உயிரிழப்பு

0 681

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே மாட்டுச்சாணம் ஏற்றிச் சென்ற டிராக்டர் பி.ஏ.பி வாய்க்காலில் கவிழ்ந்த விபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில் வாய்க்காலில் அடித்துச் செல்லப்பட்ட நபரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

மந்திராச்சலம் என்பவரது தோட்டத்தில் இருந்து மாட்டுச் சாணத்தை குப்பன் மற்றும் வீரன் உள்ளிட்ட 4 பேர் ட்ராக்டரில் ஏற்றிச் செல்லும்போது அதிக பாரம் காரணமாக ஏரிக்கரையில் ஏற முடியாமல் ட்ராக்டரின் முன்பக்க சக்கரம் தூக்கிய நிலையில் நிலைத்தடுமாறி பரம்பிக்குளம் ஆழியாறு வாய்க்காலில் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.

குப்பன், வீரன் நீந்தி கரை ஏரிய நிலையில் தங்கராஜ் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்ததாகவும் மணிகண்டன் வாய்க்காலில் அடித்து செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments