fake ப்ரியாவை நம்பி ஏமாந்த அந்த 200 பேர் ரூ 2,00,000 போச்சிப்பா..! என்னம்மா.. இப்படி பன்றீங்களேம்மா...

0 1126

இன்ஸ்டாகிராமில்  ரீல்ஸ் செய்யும் இளம் பெண்களின் புகைப்படத்தை பயன்படுத்தி, வாய்ஸ் சேன்ஞ்சர் செயலி மூலம் பெண் குரலில் பேசி வீடியோகால் வருவதாக பலரை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் பறித்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்

டிரெண்டிங் பாடலுக்கு தங்களை கிளாமராக காண்பித்து ரீல்ஸ் செய்வதை சில மாடர்ன் மங்கையர் மாமூலாக்கி வருகின்றனர்.

அந்தவகையில் ரீல்ஸ் பெண்களிடம் படத்தை காண்பித்து, வாய்ஸ் சேஞ்சர் செயலி மூலம் பெண்குரலில் பேசி 200 பேரை ஏமாற்றி பணம் பறித்ததாக கைதான “மன்மத” கிருஷ்ணன் இவர் தான்..!

சென்னையில் நிகழ்ச்சி ஏற்பட்டாளராக உள்ள இளம் பெண் ஒருவர் மேற்கு மண்டல சைபர் குற்றபிரிவு போலீசில் புகார் ஒன்றை அளித்தார் . அதில் தனது புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு தன்னை பாலியல் தொழிலாளி போல சித்தரித்து உள்ளதாகவும், தன்னுடன் பேச 800 ரூபாய் என்றும்.. வீடியோ காலில் பார்க்க 3000 ரூபாய் எனவும்... நேரில் சந்திக்க 8 ஆயிரம் ரூபாய் எனவும்..! விளம்பரப்படுத்தி இருப்பதாக புகாரில் தெரிவித்திருந்தார்

இதையடுத்து அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்ட ஐ.டியில் சாட்டிங் செய்து கூகுல் பே நம்பரை பெற்று சம்பந்தப்பட்ட நபரின் செல்போனை கண்டறிந்த போலீசார், புதுச்சேரி நகைக்கடையில் வேலைபார்த்து வந்த கிருஷ்ணன் என்ற இளைஞரை சுற்றி வளைத்தனர்.

விசாரணையில், வாய்ஸ் சேஞ்சர் செயலி மூலம் பெண் குரலில் பேசியதால் தன்னை நம்பி பல ஆண்கள் பணம் அனுபியதை ஒப்புக் கொண்ட கிருஷ்ணன், அவர்களிடம் ஏமாற்றி பணத்தை பெற்றுக் கொண்டதும் அவர்களின் செல்போன் எண்ணை பிளாக் செய்து விடுவேன், ஏமாற்றப்பட்டவர்களும் அவமானத்துக்கு பயந்து இதனை வெளியில் சொல்லமாட்டார்கள் என்று கூறி உள்ளார். 200க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து 800 ரூபாய் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை வாங்கி இருப்பதாகவும், இதுவரை 2 லட்சம் ரூபாய்க்கு மேல் வசூலித்து அந்த பணத்தை உல்லாசமாக செலவு செய்ததாகவும் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணன் , பெண்களின் பெயரில் ஏராளமான போலியான முக நூல் மற்றும் இன்ஸ்டாகிராம் ஐடிக்களை உருவாக்கி இயங்கி வந்ததையும் போலீசார் கண்டு பிடித்துள்ளனர். கிருஷ்ணனை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments