அரியானா தேர்தலில் பா.ஜ.க. 48 தொகுதிகளிலும், காங்கிரஸ் 37 தொகுதிகளிலும் வெற்றி

0 691

அரியானா சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 48 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதி பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியை தக்க வைத்துள்ளது.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி, 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வென்றதை விட 8 தொகுதிகளை கூடுதலாக பாஜக கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றியை பாஜகவினர் உற்சாகமாக கொண்டாடினர்.

காங்கிரஸ் கட்சி 37 தொகுதிகளிலும், இந்திய தேசிய லோக் தள் கட்சி 2 தொகுதிகளிலும் வென்றுள்ளது. சுயேச்சைகள் 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். 88 தொகுதிகளில் போட்டியிட்ட கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments