டெல்லியில் 70-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா

0 675

2022 ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளை, டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். சிறந்த தமிழ் படமாக தேர்வு செய்யப்பட்ட பொன்னியின் செல்வன் 1 திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன், இயக்குனர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் ஆகியோர் விருதுகளை பெற்றுக் கொண்டனர்.

சிறந்த நடிகருக்கான விருதை, காந்தாரா படத்திற்காக ரிஷப் ஷெட்டி பெற்றார். சிறந்த சண்டைப் பயிற்சியாளருக்கான விருது கேஜிஎப் 2 படத்திற்காக சகோதரர்களான அன்பறிவுக்கு வழங்கப்பட்டது.

பழம்பெரும் நடிகர் மிதுன் சக்கரவர்த்தியின் திரைத்துறை பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments