விமானப்படையின் 92 ஆவது ஆண்டு விழா... விமானங்கள், ஹெலிகாப்டர்கள் வான் சாகசத்தோடு நிறைவு

0 606

இந்திய விமானப்படையின் 92-ம் ஆண்டு நிறைவு விழா சென்னை தாம்பரத்தில் உள்ள விமானப்படை தளத்தில் வீரர்களின் அணிவகுப்பு, ஹெலிகாப்டர் மற்றும் விமானங்களின் வான் சாகசத்தோடு நடைபெற்றது.

சேத்தக், பிலாடஸ், சுகோய், எம்.கே.ஐ, தேஜஸ் உள்ளிட்ட விமானங்கள் தங்களது திறனை வானில் வெளிக்காட்டிய நிலையில், ஹெலிகாப்டர் குழுவினரும் தங்களது திறனை வெளிப்படுத்தி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தனர்.

இந்திய விமானப் படையின் சேவை வெளிநாட்டிலும் தற்போது தேவைப்படுவதாக தெரிவித்த விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் அமர் பிரீத் சிங், பேரிடர் கால நிவாரணத்திற்கு முன்னுரிமை அளிப்போம் என கூறினார். ராணுவ முப்படையின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments