தமிழகம் முழுவதும் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் மனித சங்கிலி போராட்டம்

0 529

சொத்து வரி உயர்வு, விலைவாசி ஏற்றம், மின் கட்டண உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட பிரச்சனைகளை முன்னிறுத்தி தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை ஜான்சிரானி பூங்காவில் இருந்து பெரியார் பேருந்து நிலையம் வரை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் அதிமுகவினர் கை கோர்த்து மனித சங்கிலியாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

திருப்பூர், சிறுபூலுவபட்டியில் அதிமுக சார்பில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் கழுத்தில் காய்கறி மாலைகள் அணிந்தபடி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

 

கோயம்புத்தூர் மாவட்டம் குனியமுத்தூரில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

 

புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் அதிமுகவினர் கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

சேலம் சூரமங்கலம் புது ரோடு பகுதியில் அதிமுகவினர் சாலையின் இருபுறமும் கைகளை கோர்த்தபடி வரிசையாக நின்று மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக எம்.பி., சிவி.சண்முகம் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கோபி சீதா கல்யாண மண்டபத்திலிருந்து கச்சேரி மேடு பகுதி வரை அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments