முறையான அனுமதியின்றி சரக்கு வாகனத்தில் நாட்டு வெடிகளைக் கொண்டு வந்த நபர்
கடலூரிலிருந்து முறையான அனுமதியின்றி சரக்கு வாகனத்தில் நாட்டு வெடிகளைக் கொண்டு வந்து தெள்ளார், வந்தவாசி, செய்யாறு உள்ளிட்ட பகுதிகளிலுள்ள சில்லறைக் கடைகளுக்கு விநியோகம் செய்து வந்த பிரசாந்த் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரகசிய தகவலின் பேரில் தெள்ளார் வாகன சோதனைச் சாவடியில் பிரசாந்த்தை மடக்கிய போலீசார், அவரிடமிருந்து 38 பண்டல்களில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள நாட்டு வெடிகளைப் பறிமுதல் செய்தனர்.
Comments