திருண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் சாமி தரிசனம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். கோயில் நிர்வாகத்தின் சார்பாக அவருக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
அப்போது செய்தியாளர்களை சந்தித்தஅவர் ,கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்கு முன்னதாக அண்ணாமலையாரை தரிசித்து விட்டுச் சென்றதாகவும், அதன் பலனாக கர்நாடக மாநிலத்தில் ஒரு நல்ல அரசு அமைந்தது என்றும் தெரிவித்தார்.
Comments