விமானப்படை சாகச நிகழ்ச்சியால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்.. திடீரென தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்..
சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக ஏராளமானவர்கள் வந்த நிலையில் சிந்தாதிரிபேட்டையில் நெரிசலில் சிக்கியிருந்த இருசக்கர வாகனம் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது.
தண்டையார்பேட்டையை சேர்ந்த ஜான் என்பவர் சகோதரியுடன் சென்ற பல்சர் பைக் திடீரென பற்றி எரிந்த நிலையில் இருவரும் உடனடியாக கீழே இறங்கினர்.
தீப்பற்றியதற்கான காரணம் தெரியாத நிலையில் அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments