விமானப்படையின் 92ஆம் ஆண்டை முன்னிட்டு சென்னையில் வான் சாகச நிகழ்ச்சி

0 318

சென்னையில் வான் சாகச நிகழ்ச்சி

விமானப்படையின் 92ஆம் ஆண்டை முன்னிட்டு சென்னையில் வான் சாகச நிகழ்ச்சி

21 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை வான்பரப்பில் நடைபெறும் சாகச நிகழ்ச்சி

விமானப்படையின் 72 விமானங்கள், ஹெலிகாப்டர்கள் சாகசம்

வான் சாகசங்களை நேரில் காண ஏராளமான மக்கள் ஆர்வமுடன் குவிந்துள்ளனர்

குடைகளை பிடித்தபடி குடும்பத்துடன் மெரினாவிற்கு மக்கள் வருகை

விமானப்படையின் வலிமையை பறை சாற்றும் நிகழ்ச்சி

சென்னையின் வான்பரப்பை அதிர விடுகிறது விமானப்படை

கொளுத்தும் வெயில், குடையுடன் மக்கள், அதிருது மெரினா

ஆகாச கங்கை குழு பிணைக்கைதிகளை மீட்பது போல் செய்து காட்டுகின்றனர்

பாராசூட் உதவியுடன் விமானங்களில் இருந்து குதித்த ஆகாச கங்கை குழு சாகசம்

200 கி.மீ. வேகத்தில் வானில் இருந்து தரையை நோக்கி வந்த ஆகாச கங்கை பாராசூட் குழு

பிணைக்கைதிகளை கமாண்டோக்கள் மீட்பது போல் செய்து காட்டுகின்றனர்

எம்.ஐ.-17 வி5 ரக ஹெலிகாப்டர்களில் இருந்து கயிறு மூலம் வீரர்கள் தரையிறங்குகின்றனர்

விமானப்படை வீரர்களின் தீரத்தை எடுத்துரைக்கும் வகையில் நடைபெறும் நிகழ்ச்சி

பதுங்கியபடி சென்று பிணைக்கைதிகளை மீட்பது போல் செய்துகாட்டும் வீரர்கள்

பயங்கரவாதிகளை தாக்கி செயலிழக்க செய்வதுபோல் செய்துகாட்டிய வீரர்கள்

பாராசூட் உதவியுடன் விமானங்களில் இருந்து குதிக்கும் ஆகாச கங்கை குழுவினர்

வானில் இருந்து தரையை நோக்கி வரும் ஆகாச கங்கை பாராசூட் குழு

மூவர்ணத்திலான பாராசூட்கள் மூலம் தரையிறங்கிய வீரர்கள்

 

**********************************************

ஹெலிகாப்டரில் இருந்து தரையிறங்கி பிணைக்கைதிகளை மீட்பது போல் செய்துகாட்டும் வீரர்கள்
.
சென்னை வான் சாகச நிகழ்ச்சியை காண துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை

 --------------------------------------------

விமானப்படையின் 4 சேட்டக் ஹெலிகாப்டர்கள் 'தலைகீழ் ஒய்' வடிவில் அணிவகுப்பு

சேட்டக் ஹெலிகாப்டர்களின் அணிவகுப்பிற்கு 'துவாஜ்' என பெயரிடப்பட்டுள்ளது

விமானப்படையின் ரபேல் விமானம் அதிவேகமாக வான் பரப்பை கடந்து சென்றது

ரபேல் போர் விமான நிகழ்ச்சிக்கு 'புயல்' என பெயரிப்பட்டுள்ளது

சென்னை வான் பரப்பில் முதல் முறையாக ரபேல் விமானம் சாகசம்

விமானப்படையின் 3 இலகு ரக ஹெலிகாப்டர்கள் வானில் அணிவகுப்பு

இலகு ரக ஹெலிகாப்டர்களின் அணிவகுப்புக்கு 'சங்கம்' என பெயரிடப்பட்டுள்ளது

பழமையான விமானமான டகோடா மற்றும் இரண்டு பி.சி. -7 விமானங்கள் சாகசம்

டகோடா, பி.சி. - 7 விமான அணிவகுப்பிற்கு 'சேரா' என பெயரிடப்பட்டுள்ளது

டகோடாவை தொடர்ந்து மற்றொரு பழமையான ஹார்வார்ட் விமானமும் சாகசம்

வானில் வட்டமிட்டும், குறைந்த உயரத்தில் பறந்தும் டகோடா விமானம் சாகசம்

ஹார்வார்ட் விமானத்தின் சாகச நிகழ்ச்சிக்கு 'பல்லவா' என பெயரிடப்பட்டுள்ளது

ஹார்வார்ட் விமான இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்டது

விமானப்படையின் பயிற்சி விமானமான ஹெச்.டி.டி. - 40 வானில் சாகசம்

ஹெச்.டி.டி. - 40 விமானத்தின் சாகச நிகழ்ச்சிக்கு 'கலாம்' என பெயரிடப்பட்டுள்ளது

விமானப்படையின் சி-295, இரு டோர்னியர் 228 விமானங்கள் சாகசம்

சி-295, டோர்னியர் 228 விமான சாகச நிகழ்ச்சிக்கு 'காவேரி' என பெயரிடப்பட்டுள்ளது

வான்வழி முன்னறிவிப்பு & கட்டுப்பாட்டு விமானம், இரு மிக் - 29 விமானங்கள் அணிவகுப்பு

வான்வழி முன்னறிவிப்பு விமானம், மிக் - 29 நிகழ்ச்சிக்கு 'காஞ்சி' என பெயரிடப்பட்டுள்ளது

இல்லியூஷின் ஐ.எல். - 78, இரு மிரேஜ் -2000 விமானங்கள் வானில் அணிவகுப்பு

ஐ.எல். - 78, மிரேஜ் -2000 விமானங்களின் சாகசத்திற்கு 'நட்ராஜ்' என பெயரிடப்பட்டுள்ளது

பி - 8ஐ மற்றும் 2 ரஃபேல் விமானங்கள் வானில் அணிவகுப்பு

பி - 8ஐ, ரஃபேல் விமானங்களின் அணிவகுப்பிற்கு 'தனுஷ்' என பெயரிடப்பட்டுள்ளது

பி - 8ஐ விமானங்கள் கடற்படையின் கடல்சார் ரோந்து விமானமாகும்

விமானப்படையின் 3 ஜாகுவார் விமானங்கள் வானில் சாகசம்

ஜாகுவார் விமான அணிவகுப்பிற்கு 'நீலகிரி' என பெயரிடப்பட்டுள்ளது

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 3 இலகு ரக தேஜஸ் விமானங்கள் வானில் அணிவகுப்பு

தேஜஸ் விமான அணிவகுப்பிற்கு 'கார்த்திக்கேயா' என பெயரிடப்பட்டுள்ளது

தேஜஸ் விமானம் தாக்குதலுக்கு பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டது

மூன்று சுகோய் - 30 எம்.கே.ஐ. விமானங்கள் வானில் அணிவகுப்பு

சுகோய் - 30 எம்.கே.ஐ. விமான அணிவகுப்பிற்கு 'மெரினா' என பெயரிடப்பட்டுள்ளது

சுகோய் விமானங்கள் அனைத்து வானியல் சூழ்நிலைகளிலும் திறம்பட செயல்படும்

விமானப்படையின் சுகோய் - 30 எம்.கே.ஐ. விமானம் வானில் சாகசம்

சுகோய் - 30 எம்.கே.ஐ. விமான சாகசத்திற்கு 'சோழா' என பெயரிடப்பட்டுள்ளது

இலகு ரக தேஜஸ் விமானம் சென்னை வான் பரப்பில் சாகசம்

தேஜஸ் விமான சாகசத்திற்கு 'பாண்டியன்' என பெயரிடப்பட்டுள்ளது

சாரங் வான் சாகச குழுவினரின் எம்.ஐ.-1 ரக ஹெலிகாப்டர்கள் வானில் சாகசம்

5 ஹெலிகாப்டர்கள் பல்வேறு வடிவங்களில் பறந்து வானில் ஜாலம் நிகழ்த்துகிறது

சி-17 விமானத்தை பின்தொடர்ந்து பறக்கும் சூர்யகிரண் குழுவின் விமானங்கள்

சிறந்த வான் சாகசங்களின் அடையாளமாக விளங்கும் சூர்யகிரண் குழுவினர்

ஒன்பது ஹாக் ரக விமானங்கள் சென்னை வான்பரப்பில் சாகசம்

மணி நேரமாக நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவு

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments