பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஹரியானாவில் ஆட்சியமைக்குமா காங்கிரஸ்?
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஹரியானாவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
நேற்று வாக்குப்பதிவு முடிந்த நிலையில், நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இந்நிலையில், மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 50 முதல் 65 தொகுதிகள் வரை காங்கிரஸ் கைப்பற்றி ஆட்சியமைக்கும் என கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.
90 தொகுதிகளைக் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு பத்து ஆண்டுகளுக்குப் பின் தேர்தல் நடந்துள்ள நிலையில், அங்கு எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது என்றும், காங்கிரஸ் கூட்டணிக்கு பாஜகவை விட கூடுதல் இடங்கள் கிடைக்கும் என்று கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
Comments