அக்டோபர் 1-ல் இஸ்ரேல் மீது 180 ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல்.. 4 அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகளைக் கொண்டது இஸ்ரேல்
உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த வான் பாதுகாப்பு அமைப்பை கொண்ட இஸ்ரேல் மீது, அடிக்கடி தனது பாதையை மாற்றிக்கொள்ளும் ஃபட்டா ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த அக்டோபர் 1ம் தேதி நடத்தப்பட்ட தாகுதலின் போது ஈரான் வீசிய 180 ஏவுகணைகளில் ஒரு சில ஏவுகணைகள், பல பில்லியன் டாலர் மதிப்பிலான F-35 போர் விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்த விமானப்படை தளங்கள் மீதும், இஸ்ரேலின் உளவுத்துறை தலைமை அலுவலகம் மீதும் விழுந்து வெடித்ததாக கூறப்படுகிறது.
மணிக்கு 6,000 கிலோமீட்டர் வேகத்தில், வளி மண்டலத்தை தாண்டிச் செல்லக்கூடிய ஹைப்பர்சானிக் ஃபாட்டா ஏவுகணைகள், நடுவானில் அடிக்கடி பாதையை மாற்றி வந்து இலக்கை தாக்குவதால், அவற்றில் சிலவற்றை இஸ்ரேலால் சுட்டு வீழ்த்த முடியவில்லை எனக்கூறப்படுகிறது.
இந்த தாக்குதலை தொடுக்க ஈரான் 1,700 கோடி ரூபாய் செலவிட்டதாகவும், அதனை தடுக்க இஸ்ரேல் 8,400 கோடி ரூபாய் வரை செலவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Comments