சென்னை தலைமைச் செயலகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக துணை முதல்வர் ஆலோசனை

0 537

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக துணதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு உள்ளிட்டோரும், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஆட்சியர்களும் பங்கேற்றனர்.

அதில் பேசிய துணை முதலமைச்சர், கடந்த ஆண்டு பெய்த அதிக கன மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை நினைவில் வைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட அறிவுறுத்தினார்.

மழைக்காலங்களில் தாழ்வான பகுதியில் உள்ள மின்பெட்டிகளை உயர்த்தி வைக்க உத்தரவிட்ட அவர், மீட்புப் பணிகளின்போது தன்னார்வலர்களை ஒருங்கிணைக்க வாட்ஸ் அப் குழுக்கள் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments