இந்தியா, அமெரிக்கா இடையே கனிம வளங்கள் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
முக்கியமான கனிமவளங்கள் தொடர்பாக இந்தியா-அமெரிக்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவும், அமெரிக்காவும் தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டில் வலுவான உறவை கொண்டுள்ளன என்றார்.
ஒப்பந்தத்தின் மூலம் மாசற்ற ஆற்றல் தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களின் உற்பத்திக்கு பயன்படும் லித்தியம், கோபால்ட், நிக்கல், மாங்கனீசு, கிராபைட், தாமிரம் ஆகியவற்றின் விநியோக சங்கிலியை பாதுகாக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
Comments