அங்கன்வாடி மையத்தில் தப்பும் தவறுமாக தமிழ் ஆரம்பமே அமர்க்களமா..? என்னடா இது தமிழுக்கு வந்த சோதனை

0 1112

கரூர் மாவட்டம் , கீழக் குட்டப்பட்டி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதற்கு வசதியாக சுவற்றில் வரையப்பட்டிருந்த தேசிய கொடி, பழங்கள் ,காய்கறிகளின் பெயர்கள் தப்பும் தவறுமாக எழுதப்பட்டிருந்ததால் கட்டிடத்தை திறந்து வைத்த எம்.எல்.ஏ அதிர்ச்சி அடைந்தார்.

கரூர் மாவட்டம் , குளித்தலை ஒன்றியம் , கீழக் குட்டப்பட்டியில் புதிதாக திறந்து வைக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தில் தமிழ் தடுமாறிய காட்சிகள் தான் இவை..!

11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த அங்கன்வாடி மையத்தை எம்.எல்.ஏ மாணிக்கம் திறந்து வைத்தார். அங்கன்வாடி மைய கட்டிடத்திற்குள் குழந்தைகள் கற்பதற்காக வரையப்பட்டு இருந்த தேசியக்கொடி, தேசியத் தலைவர்களின் படங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளின் பெயர்கள் பிழைகளுடன் எழுதப்பட்டு இருந்தது

இதனை கண்டு எம்.எல்.ஏ மற்றும் நிகழ்ச்சிக்கு வந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்

தமிழ் சொற்களே இப்படி என்றால் ஆங்கிலத்தை பற்றி கேட்கவா வேண்டும்..?! ஜனவரி தொடங்கி டிசம்பவர் வரை மாதங்களின் ஆங்கில பெயரை அம்மியில் வைத்து நசுக்கியது போல தவறாக எழுதப்பட்டிருந்தது

அங்கன்வாடி மையத்துக்கு வரும் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க இப்படியா தவறாக எழுதுவது ? என்று பெற்றோர் ஆதங்கப்பட்டதால், அவற்றை திருத்த அறிவுத்தப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments