திருச்சியில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த 12வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

0 790

திருச்சியில் வீட்டினருகே நேற்று இரவு நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த 12 வயது சிறுவன் பிரித்வி அஜய் மின்கம்பத்தை பிடித்த போது, மின்வயர்கள் மேலே பட்டு மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உடற்கருகி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கடந்த இரண்டு தினங்களாக மின்விளக்குகளை சரி செய்த மின்வாரிய பணியாளர்கள் அபாயகரமான நிலையில் மின்வயர்களை விட்டுச் சென்றதே விபத்துக்கு காரணம் என அப்பகுதியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

தங்களது மகனின் இறப்புக்கு காரணமான மின்வாரிய ஊழியர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும்  ராஜேஷ் - சிவரஞ்சனி தம்பதியினர் கோரிக்கை விடுத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments