சொந்த வீட்டில் நகை திருடி விட்டு திருட்டு போய்விட்டதாக போலீசில் புகார்.. விசாரணையில் வெளியான அம்பலம்

0 740

சென்னையில், சொந்த வீட்டிலேயே 125 சவரன் நகையை திருடி குதிரைப் பந்தயத்தில் இழந்ததோடு, நகைகள் திருடு போய் விட்டதாக புகாரளித்தவரை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

பெசன்ட் நகரைச் சேர்ந்த பிரதீப்குமார் அளித்த புகாரில் நடத்தப்பட்ட விசாரணையில் அவரே நகைகளை சிறுக சிறுக திருடி விற்பனை செய்து அந்த பணத்தை குதிரைப் பந்தயத்தில் இழந்தது தெரிய வந்தது.

அவரது சகோதரரான தீரஜ்குமாரும் இதேப்போன்று 15 லட்சம் ரூபாயை குதிரைப் பந்தயத்தில் இழந்து விட்டு அதனை யாரோ வழிப்பறி செய்ததாக கடந்த 2018 ஆம் ஆண்டில் புகார் அளித்திருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments