விவசாயிகள் மனிதர்கள் இல்லையா? - நீதிபதிகள் கேள்வி
விவசாயத்திற்கு தண்ணீர் வழங்கா விட்டால் அடுத்த 50 ஆண்டுகளில் தமிழகத்தில் உண்பதற்கு கூட அரிசி கிடைக்காது என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.
கரூர் மாவட்டம் மருதூர் காவிரி ஆற்றின் குறுக்கே சிவகங்கைக்கான கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. ஆற்றில் செயல்பட்டு வரும் பல்வேறு குடிநீர் திட்டப்பணிகளால் விவசாயம் பாதியாக குறைந்ததாகவும், மீதமிருக்கும் விவசாயத்தை காப்பாற்றும் வகையில் தடுப்பணை கட்டிய பிறகே கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது, தடுப்பணை கட்டும் நடவடிக்கை துவங்கி உள்ளதாகவும், கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு இடைக்கால தடை விதித்தால் ஏராளமான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்படியானால், "விவசாயிகள் மனிதர்கள் இல்லையா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த இடைக்கால தடை விதித்தனர்.
Comments