நவராத்திரி விழாவிற்காக கன்னியாகுமரியிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் சிலைகள்
திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ள நவராத்திரி விழாவிற்காக சுசீந்திரத்தில் இருந்து முன்னுதித்த நங்கை அம்மன் சிலை புறப்படும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
திருவிதாங்கூர் மன்னர் கால பாரம்பரிய முறைப்படி, சுசீந்திரத்தில் இருந்து முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன், பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து சரஸ்வதி அம்மன் ஆகிய மூன்று சாமி சிலைகள் பிரம்மாண்டமான ஊர்வலமாக திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்லப்படும்.
10 நாட்கள் நவராத்திரி விழா முடிவடைந்த பின் மீண்டும் ஊர்வலமாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்படுவது வழக்கம்.
Comments