விருத்தாசலம் அரசு மருத்துவமனையை சேதப்படுத்திய வழக்கில் - 12 பேர் கைது

0 555

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அரசு மருத்துவமனையை சேதப்படுத்திய வழக்கில் 12 பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த சனிக்கிழமை அன்று கோமங்கலத்தை சேர்ந்த அறிவழகன் இருசக்கர வாகனத்தில் மணலூர் ரயில்வே மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த கார் மோதியதில் உயிரிழந்தார்.

காரில் வந்த சரண்ராஜ், பிரகாஷ் ஆகியோர் காயமடைந்து விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், அறிவழகனின் உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் இருவரையும் தாக்கி மருத்துவமனையின் கதவு, கண்ணாடியை அடித்து உடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments