புதிய குழிகளை தோண்ட தடை விதித்தும் கேட்காத ஒப்பந்த பணியாளர்கள்..? வீடியோ எடுத்த செய்தியாளருக்கு பகிரங்க மிரட்டல்

0 892

மழைக்காலம் தொடங்குவதால் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் சாலைகளில் குழி தோண்ட மாநகராட்சி ஆணையர் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த நிலையில், மணலி புதுநகர் பகுதியில் கடந்த 5 வருடங்களாக ஆமை வேகத்தில் நடந்துவரும் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணியின் ஒரு பகுதியாக, மாநகராட்சி அனுமதி இன்றி எலந்தானூர் பிரதான சாலையை இரண்டாக வெட்டியதோடு, அபிராமி இன்பிரா என்ற ஒப்பந்த நிறுவனப் பணியாளர்கள் பொக்லைன் மூலம் பெரிய குழியை தோண்டினர். இதனால் குடிநீர் ஏராளமாக வீணானது. அதனை மோட்டார் மூலம் உறிஞ்சி மழைநீர் கால்வாயில் விட்டனர்.

ஏற்கனவே அந்தப் பகுதியில் குழாய் அமைக்க தோண்டப்பட்ட குழிகள் முறையாக மூடப்படாததால் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கும் நிலையில், புதிய குழி தோண்டியது குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளருக்கு ஒப்பந்த பணியாளர்கள் பகிரங்கமாக மிரட்டல் விடுத்தனர்.

அதில் ஒருவர் எவ்வளவோ பார்த்தாச்சு.. கைது செய்துவிடுவார்களா ? என்று சவால் விட்டார்

மாநகராட்சி ஆணையர் உத்தரவுக்கு 30 ந் தேதி வரை கால அவகாசம் உள்ளதாக கூறி புதிய குழிகளை தோண்டி வருவது குறிப்பிட தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments