கொல்கத்தாவில் 150 ஆண்டுகள் பழமையான டிராம் சேவையை நிறுத்த மேற்கு வங்க அரசு முடிவு

0 787

கொல்கத்தாவில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் பழமையான டிராம் போக்குவரத்து சேவையை நிறுத்த மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளது.

போக்குவரத்து நெரிசல், பராமரிப்பு கஷ்டங்கள், பல ஆண்டுகள் பழமையான கட்டமைப்பு, குறைவான வேகம், குறைந்துவரும் பயணிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் டிராம் சேவை நிறுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இருப்பினும், பாரம்பரிய காரணங்களுக்காக, நகரின் மையத்தில் உள்ள மைதான் முதல் எஸ்பிளனேடு வரையுள்ள 4 கிலோமீட்டர் நீள டிராம் பாதையில் மட்டும் சேவையை தொடர்ந்து மேற்கொள்ள மேற்கு வங்க அரசு திட்டமிட்டுள்ளது.

1873-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் அறிமுகப்படுத்தப்பட்ட டிராம் போக்குவரத்து நகரின் முக்கிய அடையாளமாகத் திகழ்வதாகவும், அதைக் கைவிடுவதற்குப் பதிலாக மேம்படுத்த மேற்கு வங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்களும், நெட்டிசன்களும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments