ஊழல் வழக்கில் சிறை சென்றவர் தியாகியா..? செந்தில்பாலாஜி காவல் நிலையத்தில் எப்படி கையெழுத்திடுவார்..? - இ.பி.எஸ் கேள்வி

0 1096

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வருபவரை தியாகி என்று முதலமைச்சர் பாராட்டியதால் தியாகத்தினுடைய மதிப்பு, மரியாதையே போய் விட்டது என அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அ.தி.மு.க அலுவலகத்தில் பேட்டியளித்த அவர், நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டு உயிர் நீத்தவர்களை குறிப்பிடும் தியாகம் என்ற சொல்லை ஊழல் செய்து சிறையில் அடைக்கப்பட்டு வெளியே வந்தவருக்கு குறிப்பிடுவது வெட்கக் கேடானது எனத் தெரிவித்தார்.

 

ஆட்சியின் தவறுகளை மறைப்பதற்காக தி.மு.க பவள விழா பொதுக்கூட்டம் நடத்துவதாக கூறிய இ.பி.எஸ்., எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படவில்லை என ஒரு செங்கல்லை தூக்கிக் கொண்டு ஊர் ஊராக சென்ற உதயநிதி, ஒரு லட்சம் செங்கற்களைக் கொண்டு தலைவாசலில் கட்டப்பட்ட கால்நடை பூங்காவை திறக்காமல் இருப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments