நிலவில் ஆய்வு மேற்கொள்ளும் விண்வெளி வீரர்களுக்கான பிரத்யேக உடை - அறிமுகம் செய்த சீனா.. !!
நிலவில் இறங்கி சோதனை மேற்கொள்ள உள்ள வீரர்களுக்காக, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சிறப்பு உடையை சீன விண்வெளி நிறுவனம் மக்களின் பார்வைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது.
வானத்தில் பறத்தல் என்று பொருள் படும் பௌத்த மத தெய்வமான பெஷியனின் பெயர் இந்த உடைக்கு சூட்டப்பட்டு உள்ளதாக ஆடை வடிவமைப்பு பிரிவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
சந்திரனில் மட்டுமின்றி இதர விண்வெளி ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையிலும், மிக எளிமையான, உறுதியான, இயற்கை முறையில் உடை தயாரிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். விண்வெளி உடைக்கு வேறு பெயரை மக்கள் பரிந்துரைக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
Comments