வந்தே பாரத் ரயில்களை வாங்குவதில் ஆர்வம் காட்டும் வெளிநாடுகள்..!!
கனடா, மலேசியா, சிலி போன்ற நாடுகள் இந்தியாவிடம் இருந்து வந்தே பாரத் ரயில்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் வந்தே பாரத் ரயிலை தயாரிக்க 120 கோடி ரூபாய் முதல் 130 கோடி ரூபாய் வரை செலவாகும் நிலையில், அதே வசதி கொண்ட ரயிலை பிற நாடுகளில் தயாரிக்க 180 கோடி ரூபாய் வரை செலவாகும் என கூறப்படுகிறது.
அதேபோல், ஜப்பானின் புல்லட் ரயில் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்ட 54 விநாடிகள் ஆகும் நிலையில் வந்தே பாரத் ரயில் 52 விநாடிகளில் அந்த வேகத்தை எட்டக்கூடும் என சொல்லப்படுகிறது.
மேலும், விமானத்தைவிட மிகக்குறைந்த ஒலியை வெளிப்படுத்துவதுடன், குறைவான ஆற்றல் சிக்கனத்துடன் வந்தே பாரத் ரயில்கள் இயங்குவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments