சமூக வலைத்தளத்தில் பழகிய பெண்ணை மிரட்டி பணம் பறித்த இளைஞர்.. கைது செய்த புதுச்சேரி சைபர் க்ரைம்

0 773

சமூக வலைத்தளத்தில் பழகிய பெண்ணை மிரட்டி பணம் பறித்த புகாரில் வேலூரைச் சேர்ந்த இளைஞரை புதுச்சேரி சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்தனர்.

சுரேஷ்குமார் என்ற அந்த இளைஞர் தனக்கு அறிமுகமான திருமணமான பெண் ஒருவரை ஆடையின்றி வீடியோ காலில் பேச வைத்து அதனை பதிவு செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

தான் கேட்கும் போதெல்லாம் பணம் தராவிட்டால் அந்த வீடியோவை இணையதளத்தில் பதிவிட்டு விடுவதாக மிரட்டியதால் அந்த பெண் போலீஸில் புகார் அளித்தார். கைதான சுரேஷ்குமாரின் செல்ஃபோனில் ஏராளமான பெண்களின் நிர்வாண வீடியோ இருப்பதால் அதுகுறித்து விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments