சென்னையில் ரூ.1168 கோடி மதிப்பீட்டில் 1002 புதிய கழிப்பறைகள் கட்டவும், பராமரிக்கவும் சென்னை மாநகராட்சி திட்டம்
ஆயிரத்து 168 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆயிரத்து 2 புதிய கழிப்பறைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையில் 12 மண்டலங்களில் பழைய கழிப்பிடங்களை இடித்து புதுப்பித்தல் பணிகளை ஒரு வருடத்தில் முடிக்கவும், பொது மற்றும் தனியார் பங்களிப்பு மூலம் 8 வருடங்களுக்கு பராமரிக்கும் வகையிலும் இத்திட்டத்தை செயல்படுத்தவும் மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை மாநகராட்சியின் மண்டலம் 1 முதல் 4 வரை 285 இடங்களில் கழிப்பறைகளை அமைக்கவும் பராமரிக்கவும் ரூபாய் 350.39 கோடியும், மண்டலம் 7 முதல் 10 க்கு உட்பட்ட பகுதிகளில் 395 இடங்களில் கழிப்பறைகளை அமைக்கவும் பராமரிக்கவும் ரூபாய் 443. 69 கோடியும், மண்டலம் 10 முதல் 15 ட்பட்ட பகுதிகளில் 322 இடங்களில் பணிக்காக ரூபாய் 373.11 கோடியும் ஒதுக்கப்பட உள்ளது...
Comments